சென்னை: மாநிலம் முழுவதும் வரி செலுத்தாத வணிக நிறுவ னங்கள், கடைகள் மீது நகராட்சி, மாநகராட்சி நிர்வாகங்கள் அதி ரடி நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றன. அந்த வகையில் வரி செலுத்தாத ஜவுளிக்கடை முன் மாநகராட்சி நிர்வாகம் குப்பைத் தொட்டியை வைத்ததால் காங்கயம் பகுதியில் பரபரப்பு நிலவியது. காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரத்துக் கும் மேற்பட்ட சிறிய கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இவை அனைத்தும் நகராட்சி வரியை முறையாகச் செலுத்த வேண்டும் என கடந்த சில நாட் களுக்கு முன்பே அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் தண் டோரா போட்டும், துண்டுப் பிரசு ரங்கள் விநியோகித்தும் நகராட்சி நிர்வாகம் வரி செலுத்துவது குறித்து பொதுமக்களின் கவ னத்துக்கு கொண்டு சென்றது. இந்நிலையில் காங்கயம் கடை வீதியில் இயங்கி வரும் ஒரு ஜவுளிக் கடையின் நிர்வாகம், நகராட்சிக்குரிய வரியைச் செலுத்தவில்லை எனத் தெரிகி றது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு, ஜவுளிக்கடையின் முன்பு குப்பைத் தொட்டியை வைத்தது. இதனால் ஜவுளிக் கடையின் நுழைவாயில் வழியே வாடிக்கையாளர்கள் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
காங்கயம் கடை வீதியில் இயங்கி வரும் தனியார் ஜவுளிக் கடை நகராட்சி வரியை செலுத்தாததால் அந்தக் கடையின் முன்பு நகராட்சி வைத்த குப்பைத் தொட்டி. வரி செலுத் தியதை அடுத்து குப்பைத் தொட்டி அகற்றப்பட்டது. படம்: தகவல் ஊடகம்

