வஞ்சிக்கிறது பாஜக அரசு: சாடும் அய்யாக்கண்ணு

வஞ்சிக்கிறது பாஜக அரசு: சாடும் அய்யாக்கண்ணு

1 mins read
0122a964-f699-49ae-a317-dc61f786fa37
-

தேனி: கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி தமிழகத்தை வஞ்சிப்பதாக நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சாடியுள்ளார். தேனியில் செய்தியாளர்க ளிடம் பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை விவசாயிகள் உயிரை மாய்த்துக்கொண்டாலும் பிரத மருக்கு கவலையில்லை என்றார். "காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் எவ்வளவு மழை பெய்துள்ளது, கர்நாடகா எவ்வ ளவு சாகுபடி செய்துள்ளது என் பது தெரிந்துவிடும். அதனால் தான் அம்மாநில அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது.

"மரபணு மாற்றப்பட்ட விதை களை நான்கு ஆண்டுகள் உண்டால் இளைஞர்கள் ஆண் மையை இழந்துவிடுவர். பெண் கள் கருத்தரிக்கும் சக்தியை இழந்துவிடுவார்கள். இதனால் தான் மரபணு மாற்றப்பட்ட விதை களை நாம் இறக்குமதி செய்யக் கூடாது என்று பிரதமருக்கு கோரிக்கை வைக்கிறோம்," என் றார் அய்யாக்கண்ணு. இது தொடர்பாக மக்கள் மத் தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தப் பணியில் பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி ஆகியவை இடையூறு செய்வ தாகத் தெரிவித்தார். "எங்களுக்கு கறுப்புக்கொடி காட்டுகின்றனர். எங்கு சென்றா லும் அடிக்க வருகிறார்கள், சில இடங்களில் அடித்தும் விட்டனர். "மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்கா கவே துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கிறோம். அதையும் இவர்கள் தடுப்பது ஜனநாயகத் துக்கு விரோதமான செயல்," என்றார் அய்யாக்கண்ணு.