சென்னை: மாநிலத் திட்டங்களை முறையாக நிறைவேற்றி இருக்கும் தமிழகத்திற்கான நிதியைக் குறைப்பது கண்டனத்துக்குரியது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில, மாநி லங்களுக்கு எதிராக ஒரு சிறிய அமைப்புக்கு அதிகாரம் வழங்கு வது சட்டவிரோதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
15ஆவது மத்திய நிதி ஆணையத்தின் ஆய்வு வரம்பு களை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ள அவர், மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாயில் இருந்து நியாயமான நிதி பகிர்வுக்கு தற்போது வழி யில்லை என்று குறிப்பிட்டுள்ளார். "முன்பு ஒப்புக்கொண்டதற்கு மாறாக மத்திய நிதி ஆணைய ஆய்வு வரம்பு தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2011 மக்கள் தொகை அடிப்படையில் நிதி பகிர்வு செய்யலாம் என்று கூறப் பட்டுள்ளது.

