சென்னை: சீமைக் கருவேல மரங்களால் நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதாக சட்டப்பேரவையில் பேசிய திமுக உறுப்பினர் வாகை சந்திரசேகர் தெரிவித்தார். பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சீமைக் கருவேல மரங்களை அழிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். "விறகு மற்றும் கறிக்கட்டைக்காக 1950ஆம் ஆண்டு சீமை கருவேல மரங்கள் தமிழகத்துக்கு கொண்டு வரப்பட்டன. தற்போது இந்த சீமைக் கருவேல மரங்கள் நிலத்தடி நீரை உறிஞ்சி பேராபத்தை ஏற்படுத்துகின்றன. "தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் பரவிக் கிடக்கின்றன. இவற்றைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார் வாகை சந்திரசேர்.
சீமைக் கருவேல மரங்களால் ஆபத்து: திமுக எம்எல்ஏ எச்சரிக்கை
1 mins read
-

