கணவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த சசிகலா

1 mins read
d067853f-a8de-4508-b2b3-67ee0c8e4aa3
-

தஞ்சை: கணவர் நடராஜனின் மறைவை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்த சிறை விடுப்பு பெற்றுள்ள சசிகலா நேற்று முன் தினம் இரவு தஞ்சாவூர் சென்ற டைந்தார். கண்ணீருடன் காரில் வந்திறங்கிய அவரைக் கண்டு உறவினர்களும் ஆதரவாளர்களும் கண்கலங்கினர். நடராஜன் காலமான தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 நாட்கள் சிறை விடுப்பு பெற்று வெளியே வந்தார் சசிகலா.

அவர் நடராஜனுக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் தஞ்சா வூரை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது, செய்தியாளர்களைச் சந்திக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை சிறை நிர்வாகம் விதித்துள்ளது. பெங்களூருவில் இருந்து கார் மூலம் தஞ்சை சென்றடைந்தார் சசிகலா. அவர் பயணத்தின்போது அமைதியாக இருந்ததாகவும், பெரும்பாலான நேரம் அழுதபடியே இருந்ததாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "சசிகலாவுடன் தினகரனும் ஒரே காரில் தஞ்சை சென்றடைந் தார். காரில் இருந்து இறங்கும் போதே சசிகலா அழுதபடி காணப்பட்டார்.

பின்னர் கணவரது உடல் அருகே கண்ணீர் மல்க காணப்பட்டார்," என அந்த ஊடகச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே, நடராஜனின் மறைவுக்கு முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இரங்கல் தெரிவிக் காதது பண்பாடற்ற செயல் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கணவரின் உடல் அருகே சசிகலா. படம்: தகவல் ஊடகம்