'4,500 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த தமிழ்'

'4,500 ஆண்டுகள் தொன்மைவாய்ந்த தமிழ்'

2 mins read

செம்மொழியான தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளே உலகின் ஆகப் பழமையானவை என்று அண்மைய ஆய்வு முடிவுகள் கூறு கின்றன. ஜெர்மனியைச் சேர்ந்த மேக்ஸ் பிளாங்க் மானிட வரலாற்று அறி வியல் நிலையமும் டேராடூனில் உள்ள இந்திய வனஉயிர் நிலைய மும் சேர்ந்து உலகின் தொன்மை யான மொழிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டன. 'ராயல் சொசைட்டி ஓப்பன் சயன்ஸ்' எனும் சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு முடிவுகள், முந்தைய மொழியியல், தொல்லியல் ஆய்வு முடிவுகளுடன் ஒத்துப்போகின்றன. ஆய்வாளர்கள் திராவிட மொழி களைத் தாய்மொழியாகப் பேசு வோரிடமிருந்து தகவல்களைச் சேகரித்தனர்.

திராவிட மொழிக் குடும்பத்தில் மொழிகள், கிளைமொழிகள் என கிட்டத்தட்ட 80 மொழிகள் உள்ள தாகவும் 220 மில்லியன் பேர் அம் மொழிகளைப் பேசுவதாகவும் ஆய் வில் தெரியவந்துள்ளது. அவர் களில் பெரும்பாலானோர் தெற்கு, மத்திய இந்தியாவிலும் இந்தியா வைச் சுற்றியுள்ள நாடுகளிலும் வசித்து வருகின்றனர். அவற்றுள் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளும் பல நூற் றாண்டுகால இலக்கிய மரபைக் கொண்டுள்ளதாகவும் அவற்றுள் தொன்மைமிக்கது தமிழிலக்கியம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

"முற்காலத்திய யுரேசிய வர லாற்றை அறிந்துகொள்ள திரா விட மொழிகள் பற்றிய ஆய்வு முக்கியமானதாகத் திகழ்கிறது. ஏனெனில், மற்ற மொழிக் குடும் பங்கள் மீது திராவிட மொழிகள் குறிப்பிடத்தக்க ஆளுமையைச் செலுத்தியுள்ளன," என்றார் மேக்ஸ் பிளாங்க் நிலையத்தின் ஆன்மேரி வெர்க்கெர்க். திராவிடர்களே இந்தியத் துணைக் கண்டத்தின் பூர்வகுடி கள் என்பதும் 3,500 ஆண்டு களுக்கு முன்பிருந்தே, ஆரியர் களின் வருகைக்கு முன்னரே, அவர்கள் இந்தியாவில் வாழ்ந்து வந்தனர் என்பதும் ஆய்வாளர் களின் ஒருமித்த கருத்து.

அத்துடன், இப்போது இருப் பதைக் காட்டிலும் பழங்காலத்தில் திராவிட மொழிகள் மேற்கத்திய நாடுகளில் இன்னும் அதிகமாகப் பேசப்பட்டிருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். நவீன புள்ளியியல் முறை களின் துணையுடன் மேற்கொள் ளப்பட்ட இந்த ஆய்வில், திராவிட மொழிக் குடும்பத்தின் வயது 4,000=4,500 ஆண்டுகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.