ஃபேஸ்புக் நிறுவனர் பகிரங்க மன்னிப்பு

ஃபேஸ்புக் நிறுவனர் பகிரங்க மன்னிப்பு

1 mins read
00b16480-42a6-4f0d-a462-fe1d7b718ad2
-

ஃபேஸ்புக் பயனாளர்கள் 50 மில்லியன் பேரின் தகவல்கள் திருடப்பட்டது உண்மைதான் என ஒப்புக்கொண்டுள்ள அந்தச் சமூக ஊடகத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான மார்க் ஸக்கர்பர்க், அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். லண்டனைச் சேர்ந்த கேம்பி ரிட்ஜ் அனலிட்டிகா எனும் அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் ஃபேஸ்புக் பயனாளர்களின் தக வல்களைப் பெற்று, அவற்றின் மூலம் 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற டோனால்ட் டிரம்ப்புக்கு உதவியதாகக் கூறப் படுகிறது. அதேபோல, ஜெர்மனி உள்ளிட்ட வேறு சில நாடுகளில் நடந்த தேர்தல்களிலும் கேம்பிரிட்ஜ் அன லிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, உலகின் ஆகப் பெரிய சமூக ஊடகக் கட்டமைப் பான ஃபேஸ்புக்கிற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கேம்பிரிட்ஜ் அனலிட் டிகா விவகாரம் குறித்து மௌனம் கலைத்துள்ளார் திரு ஸக்கர்பர்க்.