தமிழரின் பெருமையை உலகறியச் செய்த வள்ளுவருக்கு மியன்மாரில் கோட்டம்

1 mins read
f0d18e39-47a4-4634-9db1-a263f7c4f2e9
-

யங்கூன்: தமிழனின் பெருமையைக் கடல் கடந்து பறைசாற்றும் வகை யில் மியன்மாரிலும் வள்ளுவனுக்கு கோட்டம் திறக்கப்படவுள்ளது. கடந்த 1976ஆம் ஆண்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் திருக்குறளை நமக்கு அளித்த திருவள்ளுவரின் நினைவாக வள் ளுவர் கோட்டம் திறக்கப்பட்டது. இதன் மேல் பகுதி திருவாரூர் தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள் ளது சிறப்பு அம்சமாகும். சென்னையில் உள்ள வள்ளு வர் கோட்டத்தின் மாதிரியாகவே மியன்மாரின் தாட்டான் நகரத் தில் உருவாகி வரும் இந்தக் கோட்டம் வரும் மே மாதம் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளது.

மியன்மாரின் தலைநகரமான யங்கூனில் இருந்து 230கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாட் டான் பகுதியில், சுமார் 9600 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகள் 1990ஆம் ஆண்டு துவங்கிய நிலையில் தற்போது 25 ஆண்டுகள் கழித்து அதன் பணிகள் நிறைவடையவுள்ளன. மேலும் தேரின் கருவில் வைக்கப்படும் 5 அடி உயரம் உள்ள திருவள்ளுவரின் பளிங்குச் சிலை, 20 ஆண்டுகளுக்கு முன் னர் மாமல்லபுரத்தில் செதுக்கப் பட்டுக் கடல் வழியாக மியன்மார் கொண்டு செல்லப்பட்டதாகும்.

சுமார் 10 லட்சம் தமிழர்கள் வசிக்கும் மியன்மாரில் அமைக் கப்படும் இந்த வள்ளுவர் கோட் டத்திற்கு வரவேற்புகள் குவிந்து வருகின்றன. அதோடு இந்தத் தளம் மியன்மாரில் வசிக்கும் தமிழர்கள் திருக்குறள் மற்றும் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள உத வும் பயிற்சிகூடமாகவும் அமைந்து உள்ளது.

சென்னையின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றான வள்ளுவர் கோட்டம். படம்: ஊடகம்