புதுடெல்லி: தகவல் திருட்டும் அதன் அடிப்படையில் நடந்த தேர்தல் முறைகேடு குறித்தும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரிட்டிஷ் நாட்டின் தகவல் ஆய்வு நிறுவனமான 'கேம்ப்ரிட்ஜ் அனா லிட்டிகாவின் இந்தியப் பங்காளி யான 'ஓவல்னோ' நிறுவனத்தின் இணையப்பக்கம் முடக்கப்பட்டது. பல நாடுகளின் தேர்தல்களில் அனாலிட்டிகாவின் தலையீடு இருந்ததாகக் கூறப்படும் வேளை யில், 'ஒவல்னோ' நிறுவனம் இந் திய தேர்தலில் மூக்கை நுழைத் ததாகக் கூறப்படுகிறது.
சமூக ஊடகங்கள் வாயிலாக பொய்யான புள்ளி விவரங்களின் அடிப்படையில், மக்களின் மன நிலையை மாற்றி, தேர்தலில் வெற்றி பெறும் நோக்கோடு அரசி யல் கட்சிகள் இந்த நிறுவனங் களின் உதவியை நாடியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக சுமார் 50 மில்லியன் ஃபேஸ்புக் பயனாளர்களின் தனிப் பட்ட தகவல்கள் திருடப்பட்டதை அதன் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் ஒப்புக்கொண்டதோடு மன் னிப்பும் கேட்டுள்ளார்.
ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பர்க் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படம்: ஊடகம்

