தஞ்சை: அண்மையில் துவங்கப்பட்ட 'அம்மா மக்கள் முன்னேற்ற கழக'த்திற்கு சசிகலா தான் பொதுச் செயலாளர் என டிடிவி. தினகரன் தெரிவித்துள்ளார். சசிகலா தான் பொதுச் செயலாளர் என்பது முன்பே தீர்மானிக்கப்பட்ட ஒன்று என்றும் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் தெளிவுபடுத்தினார். அதிமுகவில் இருந்து சசிகலாவும் அவரது குடும்பத் தாரும் ஒட்டுமொத்தமாக புறக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அண்மையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் துவங்கினார் தினகரன்.
இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சலசலப்பையும் அதிருப் தியையும் ஏற்படுத்தியது. எனினும் அவர்களில் பலரை சமாதானப் படுத்தி மீண்டும் ஒருங்கிணைத் துள்ளார் தினகரன். புதுக்கட்சி தொடங்கியதால் அவருக்கும் சசிகலாவுக்கும் இடையே மோதல் நிலவுவதாக செய்தி வெளியானது. தினகரன் துவங்கிய புதுக்கட்சிக்கு சசிகலா வின் ஆதரவு இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் தஞ்சையில் நடைபெற்ற தனது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறை விடுப்பில் வெளியே வந்துள்ள சசிகலா, காரில் தஞ்சை சென்ற போது அவருடன் தினகரனும் உடன் சென்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், புதிய கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா செயல்படுவார் என்று திட்டவட் டமாக குறிப்பிட்டார். மேலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக வரும் 25ஆம் தேதி தஞ்சையில் உண் ணாவிரதப் போராட்டம் நடை பெறும் என்றும் அவர் அறிவித்தார். தனது தலைமையில் நடை பெறும் இந்தப் போராட்டமானது தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்கும் என்றும் தினகரன் மேலும் தெரி வித்தார்.
இந்நிலையில் தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, அதிமுக வினர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தும் போராட்டம் வெறும் கண்துடைப்பு நாடகம் என்றார்.

