சர்கோஸி: எனது வாழ்க்கை 'நரகமாகிவிட்டது'

சர்கோஸி: எனது வாழ்க்கை 'நரகமாகிவிட்டது'

1 mins read

பாரிஸ்: பிரான்சின் முன்னாள் அதிபர் நிக்கலஸ் சர்கோஸி, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளால் தனது வாழ்க்கை 'நரகமாகிவிட்டது' என்று கூறியுள்ளார். தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று நீதிமன்றத்தில் அவர் கூறியதாகப் பத்திரிகை செய்தி கூறுகிறது. 2007ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக திரு சர்கோஸி, லிபியாவின் மறைந்த தலைவர் கடாஃபியிடமிருந்து சட்டவிரோதமாக மில்லியன் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டதாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

அந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். 63 வயதாகும் சர்கோஸி தான் தவறு எதுவும் செய்யவில்லை என்று கூறி வந்துள்ளார். தன் மீது கூறப்பட்டும் குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கம் கொண்டவை என்று அவர் கூறுகிறார். சர்கோஸியின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவரும் அவரது நெருங்கிய நண்பருமான பிரைஸ் ஹோர்டிபியூக்சையும் போலிசார் விசாரித்து வருகின்றனர்.