திமுக மண்டல மாநாடு; பார்வையிட்ட உதயநிதி

திமுக மண்டல மாநாடு; பார்வையிட்ட உதயநிதி

1 mins read
1f0acf1d-cde7-4405-b444-e48e12d7d262
-

ஈரோடு: பெருந்துறையில் இன்று திமுக மண்டல மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாடு 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி திமுக பிரமுகர்கள் பிரமாண்ட மான முறையில் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இருந்து நேற்று மதியம் பெருந் துறைக்கு வந்த நடிகரும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் திமுக மண்டல மாநாட்டின் ஏற்பாட்டுப் பணிகளைப் பார்வையிட் டார். உதயநிதி ஸ்டாலினுடன் அவரது தாயார் துர்கா ஸ்டாலி னும் வந்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலினை வர வேற்ற வரவேற்பு குழுத் தலைவர் முத்துசாமியும் கட்சி பிரமுகர் களும் பணிகள் குறித்து விளக் கம் அளித்தனர். அரங்கத்தில் அமைக்கப் பட்டிருந்த திமுக வரலாறு பற்றிய புகைப்படக் கண்காட்சி யையும் உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் பார்த்து ரசித்தனர்.

திமுக மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் பார்த்த நடிகர் உதயநிதி ஸ்டாலின். அருகில் அவரது தாயார் துர்கா ஸ்டாலின். படம்: தமிழக ஊடகம்