ஒரே நாளில் அனைத்தும் மாறும்: சசிகலா ஆவேசம்

ஒரே நாளில் அனைத்தும் மாறும்: சசிகலா ஆவேசம்

2 mins read
857be415-b712-47d7-9851-01df6b52bdd6
-

தஞ்சை: தாம் நினைத்தால் ஒரே நாளில் அரசியல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் எனத் தனக்கு நெருக்கமானவர் களிடம் சசிகலா கூறி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சிறை விடுப்பில் வெளிவந்துள்ள அவர், அந்த விடுப்புக் காலம் முடிவதற்குள் தனது எதிரிகளுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்போவதாக ஆவேசத்துடன் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமது கணவரின் இறுதிச் சடங்கிற்காக 15 நாள் விடுப்பில் வெளிவந்துள்ளார் சசிகலா. தற் போது தஞ்சையில் இருக்கும் அவரை ஏராளமானோர் நேரில் சந்தித்து ம.நடராஜனின் மறைவு தொடர்பாக துக்கம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தமது குடும்பத் தாருக்கு சசிகலா சில உத்தரவு களைப் பிறப்பித்திருப்பதாக கூறப் படுகிறது. மேலும் தன் மனதில் இருப்பவற்றைக் குடும்பத்தாரிடம் மிக ஆவேசமாகத் தெரிவித்த தாகவும் தமிழக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. "நம்மிடம் கும்பிடு போட்டு விட்டு பதவியில் அமர்ந்தவர்கள் எல்லாம் இப்போது நமக்கு எதி ராகப் பேசிக்கொண்டிருக்கிறார் கள். இவர்கள் எத்தனை நாட்கள் பேசப்போகிறார்கள் என்று பார்க்கிறேன்.

"நான் நினைத்தால் ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும். அங்கிருக்கும் பலரும் உள்ளுக்குள் புழுங்கியபடி தான் உள்ளனர்," என்று சசிகலா கூறியதாகத் தமிழக ஊடகச் செய்தி தெரிவிக்கிறது. சிறை விடுப்புக் காலம் முடிவ தற்குள் தாம் யார் என்பதை எதிரி களுக்கு உணர்த்தப்போவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமது கையைவிட்டுப் போன அதிகாரம் மீண்டும் தேடிவரும் என்று குடும் பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இச்செய்தியால் அதிமுக வட் டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இதற்கிடையே தினகரனின் செயல்பாடு குறித்த தனது கடும் அதிருப்தியை சசிகலாவிடம் அவரது சகோதரர் திவாகரன் வெளிப்படுத்தி இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.