ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடையடைப்புப் போராட்டம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடையடைப்புப் போராட்டம்

1 mins read

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று தூத்துக்குடியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஏறத்தாழ 10 ஆயிரம் கடைகள், வணிக நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாட்டுப் படகு மீனவர்களும் கடலுக்குச் செல்லவில்லை. மாநகரம் முழுவதும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் தூத்துக்குடியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகக் கூறி இந்த மாவட்ட மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.