விசாரணை ஆணையம் என்கிற பெயரில் ஏதோ சதி: தினகரன் சந்தேகம்

விசாரணை ஆணையம் என்கிற பெயரில் ஏதோ சதி: தினகரன் சந்தேகம்

1 mins read

தஞ்சை: விசாரணை ஆணையம் என்கிற பெயரில் ஏதோ சதித் திட்டம் தீட்டப்படுவதாக டிடிவி தினகரன் புகார் எழுப்பியுள்ளார். தமது கட்சியினர் மட்டுமல்லா மல் பொதுமக்களும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாக தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் தெரிவித்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டி ருக்கும் விசாரணை ஆணையம் நியாயமான திசையில் சென்று கொண்டிருக்கிறதா என்பது இறைவனுக்கே வெளிச்சம் என்று குறிப்பிட்ட அவர், ஒரு நபர் ஆணையம் என்பது சரிப்பட்டு வராது என்றார்.

"ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என் பதே எங்களது நிலைப்பாடு. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு நபர் விசாரணை ஆணையத் தின் மூலம் கண்துடைப்புக்காக ஏதாவது எழுதி முடித்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்," என்றார் தினகரன். காலஞ்சென்ற ம.நடராஜனின் படத்திறப்பு விழா மார்ச் 30ஆம் தேதி நடைபெற இருப்பதாக குறிப்பிட்ட அவர், அந்நிகழ்வில் பங்கேற்க முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றார். "பேரவையில் பெரும்பான் மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பு நடக்கும்போது சிலீப்பர் செல்கள் வெளிப்படுவர். அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் வாக்களிப்பர்," என்றார் தினகரன்.