சென்னை: தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடந் துள்ள பல்வேறு முறைகேடுகள் தற்போது அம்பலமாகி வருகின் றன. இந்நிலையில் பல்கலைக்கழக பேராசிரியர் பணி நியமனம் தொடர்பில் லஞ்சம் பெற்றதாக முன்னாள் துணைவேந்தர்கள் இருவர் மீது குற்றம்சாட்டப் பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் எந்த நேரத்திலும் கைதாகலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் பல் கலைக்கழக வட்டாரங்களில் பர பரப்பு நிலவுகிறது. சென்னையில் இயங்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் ராஜாராம், தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவாகி உள்ளது.
கடந்த 2013 முதல் 2016ஆம் ஆண்டு வரை அண்ணா பல் கலைக்கழகத்தில் துணைவேந்த ராகச் செயல்பட்டார் ராஜாராம். அப்போது லஞ்சம் பெற்றுக் கொண்டு பேராசிரியர்களை நிய மித்தார் என்பதே குற்றச்சாட்டு. இதற்காக பெருந்தொகை கைமாறி யதாகக் கூறப்படுகிறது. இதே போல் தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தில் வெளிநாடுவாழ் இந்தி யர்களுக்கு 15 விழுக்காடு இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, துணைவேந்தராக இருந்த வணங் காமுடி முறைகேட்டில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார்.
இதையடுத்து இவர்கள் இரு வருக்கும் சொந்தமான இடங்க ளில் லஞ்ச ஒழிப்புப் போலிசார் அதிரடி சோதனை மேற்கொண்ட னர். இதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. ராஜாராமுக்கு ரூ.20 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக வும், வணங்காமுடிக்கு சொந்த மாக உள்ள ரூ.97 லட்சம் மதிப் புள்ள சொத்துக்களின் ஆவணங் கள் கைப்பற்றப்பட்டதாகவும் தமி ழக ஊடகம் செய்தி வெளியிட் டுள்ளது. இந்நிலையில் இருவரும் முன்பிணை கோரி இன்று நீதி மன்றத்தை அணுக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணங்காமுடி, ராஜாராம். படங்கள்: தகவல் ஊடகம்

