தமிழகத்தை சோமாலியாவாக மாற்ற மத்திய அரசு முயற்சி: தினகரன் குற்றச்சாட்டு

1 mins read

தஞ்சை: மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுப்பதா கக் கூறி தமிழகத்தை சோமாலி யாவாக மாற்ற மத்திய அரசு முயற்சி செய்கிறது என டிடிவி தினகரன் எம்எல்ஏ குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசால் தமிழகத்தின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக் கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தஞ்சையில் நேற்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில் தினகரன் உட்பட ஏரா ளமானோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய தினகரன், தமிழக மக்களின் போராட்டங்கள் மூலமாகவே மேலாண்மை வாரி யம் அமைப்பது சாத்தியமாகும் என்றார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார். "தமிழக மக்கள் நலனுக்காக அரசியல் வேறுபாடின்றி அனைத்துக் கட்சியினரும் ஒன் றாக இணைந்து போராடினால் அபாயகரமான நிலையில் உள்ள தமிழகத்தை மீட்டெடுக்கலாம்," என்று தினகரன் மேலும் தெரிவித்தார்.