சென்னை: தவறான நிதிக் கணக்குகளைக் காண்பித்து ரூ.250 கோடி வங்கிக் கடன் பெற்று மோசடி செய்ததாக நாதெள்ள சம்பத் ஜுவல்லரி நிறு வனம் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் குறித்து சிபிஐக்கு ஸ்டேட் வங்கி கடிதம் அனுப்பியது. அதில், தவறான நிதிக்கணக்குகள் குறித்து குறிப் பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நாதெள்ள சம்பத் நிறுவனம் மீது வழக்குப் பாய்ந்துள்ளது. "கடந்த 2010ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனம் தவறான நிதிக் கணக்குகளைக் காட்டி ஸ்டேட் வங்கியில் ரூ.250 கோடி வரை கடன் பெற்றது.
"கடந்த 2017 டிசம்பர் 22ஆம் தேதி வங்கி மேற்கொண்ட ஆய் வில் இது தெரிய வந்தது. எனவே மோசடி தொடர்பாக உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும்," என்று சிபிஐக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது. ஏற்கெனவே நாதெள்ள சம்பத் ஜுவல்லரியின் துணை நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து மாதாந் திர தங்க நகை சேமிப்புத் திட்டம் என்ற பெயரில் பணம் வசூலித்தது. அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையில் சுமார் 21 ஆயிரம் பேர் இத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்தினர். ஆனால் ரூ.75 கோடி வசூலான நிலையில், பணம் செலுத்தியவர் களுக்குத் திருப்பித்தர முடிய வில்லை என்று கூறி சென்னையில் உள்ள தனது கிளைகள் அனைத் தையும் இந்நிறுவனம் மூடிவிட்டது.
இது தொடர்பாக நாதெள்ள சம்பத் செட்டி நிறுவனத்தின் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவாகி உள்ளது. இந்நிலையில் நாதெள்ள சம்பத் ஜுவல்லரி நிறுவனம் மீதும் மோசடிப் புகார் எழுந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடியின் வங்கி மோசடி அம்பலமானதைத் தொடர்ந்து இது போன்ற மோசடி கள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. ஏற்கெனவே சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் நகைக் கடை நிறுவனம் மோசடிப் புகாரில் சிக்கி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

