ராமதாஸ்: ஊழலில் உலக சாதனை புரிந்த துணைவேந்தர்கள்

ராமதாஸ்: ஊழலில் உலக சாதனை புரிந்த துணைவேந்தர்கள்

1 mins read
5f46bf00-4284-4892-b8c8-a948d5c8f9c5
-

"தமிழகத்தில் அதிக ஊழல்கள் நடைபெற்ற முதல் 5 பல்கலைக்கழ கங்கள் என்றால் அவை அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல் கலைக்கழகம், பெரியார் பல்கலைக் கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவைதான்," என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் தகுதிகள் என்ன? அவர்கள் அந்த பதவியைப் பிடிக்க யார் யாருக்கு எவ்வளவு கையூட்டு கொடுத்தனர்?

பணி நியமனங்கள், கொள் முதல்கள், கட்டுமான ஒப்பந்தங்கள் ஆகியவற்றில் ஊழல் செய்து துணைவேந்தர்கள் ஈட்டிய பணத்தில் உயர் கல்வித்துறை செயலாளர்கள், உயர்கல்வித்துறை அமைச்சர்கள் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பங்கு எவ்வளவு? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள அவர், இவற்றுக்கான பதில்களைக் கண் டறியும் வகையில் விசாரணையின் வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

கையூட்டு பெற்று செய்யப்பட்ட அனைத்து பணி நியமனங்களையும் ரத்து செய்வது குறித்து தமிழக அரசு தெளிவான கொள்கை முடிவை விரைவாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள ராமதாஸ், உயர்கல்வி நிறுவனங் களின் ஊழல் தொடர்பாக பெயர ளவில் சில நடவடிக்கைகளை எடுத்து விட்டு, ஊழலை மூடி மறைத்துவிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ்