குழித்துறையில் சாலைகளைச் சீரமைக்க கோரி காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அக்கட்சி எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஜயதா ரணி உள்பட 95 பேரை போலிசார் கைது செய்தனர். விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பல சாலைகள் சேதமடைந்து காணப்படுவதாகவும், இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். படம்: தகவல் ஊடகம்
சாலை மறியல் போராட்டம்: இரு எம்எல்ஏக்கள் கைது
1 mins read
-

