'காவிரிப் பிரச்சினையில் பாஜக அரசு பிடிவாதம்'

1 mins read
21fd20d6-d7bf-4e9a-9c52-ff775ff05495
-

சென்னை: விவசாயிகளின் வேதனை, வாழ்வாதாரத்தை மன திற் கொண்டு மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார். இவ்விஷயத்தில் மத்திய அரசு பிடிவாதம் பிடிக்கக்கூடாது என்றும் நியாயத்துக்குத் தலை வணங்கிச் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். "மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்காக உச்ச நீதிமன்றம் அளித்த கால அவகாசத்தில் இன் னும் சில நாட்களே உள்ளன.

தமிழக விவசாயிகள் ஏற்கெனவே தண்ணீர் தட்டுப்பாட்டாலும், தமிழ கத்துக்கு உரிய காவிரி நதிநீர் கிடைக்காததாலும் வறட்சியின் விளிம்பில் நிற்கிறார்கள். "தற்போது சட்டத்தின் அடிப் படையில் காவிரி நீர் கிடைக்கும் என்று நம்பி இருக்கின்றனர். எனவே 29ஆம் தேதிக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்," என்று வாசன் தெரி வித்துள்ளார். இல்லையெனில் வரும் 31ஆம் தேதி திருச்சியில் தமாகா மாவட்ட தலைவர்களின் அவசரக் கூட்டம் நடைபெறும் என்றும், அதில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அவர் மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளார்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்