12 இடங்களில் காட்டுத்தீ: வன ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

12 இடங்களில் காட்டுத்தீ: வன ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

1 mins read
148381b3-8747-4069-9647-fa617bda4558
-

சென்னை: தமிழகத்தில் மொத் தம் 12 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டதாக இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித் துள்ளது. மாநிலத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் மெல்ல உணரப்பட்டு வருகிறது. வெப்பத் தின் அளவானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சில இடங்களில் கோடை மழையும் பெய்து வருகிறது. குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் 20 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசுக்கு காட்டுத்தீ குறித்த தகவல்களை இந்திய வன ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

அதில், கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிமலை வடக்குப் பகுதி; நாமக்கல் மாவட்டம், எருமைபட்டியில் இரண்டு இடங் களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. "மேலும், நீலகிரி மாவட்டம், பைகாராவில் நான்கு இடங்கள், திருவள்ளூர் மாவட்டத்தில் புனி மண்காடு பகுதி என மொத்தம் 12 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட் டுள்ளது," என வன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழக வனத் துறை காட்டுத்தீ பரவாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.