சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக் கம் வழக்கத்தை விட கடுமையாக இருக்கும் என வானிலை நிபு ணர்கள் எச்சரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தற்போது அம்மை நோய் உட்பட பல்வேறு கோடை கால நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக அம்மை நோய்கள் வேகமாகப் பரவுவதால் பொது மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்து வர்கள் அறிவுறுத்தி உள்ளனர். வழக்கத்தைவிட இந்த ஆண்டு தமிழகத்தில் ஐந்து டிகிரி கூடுதல் வெப்பநிலை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி மே இறுதி வரையிலான காலத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தைவிட மிகக் கடுமை யாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கோடை வெயிலின் முழு வீச்சு தொடங்கும் முன்பே தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான அம்மை நோய்களின் தாக்கத்துக் குப் பொதுமக்கள் ஆளாகி வரு கின்றனர். கோடை காலத்தில் அம்மை நோயைப் பரப்பும் கிருமிகளின் தாக்கமும் பெருகும் ஆற்றலும் அதிகரிப்பதால் பெருமளவில் பாதிப்பு ஏற்படுவதாக சேலம் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னம்மை, தட்டம்மை, பொன்னுக்குவீங்கி, மணல்வாரி அம்மை எனப் பல வகையான அம்மை நோய்கள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.

