மதுரை: தமிழக அரசியல் களத்தில் தற்போது வெற்றிடம் ஏதும் இல்லை எனத் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடிகர்கள் ரஜினியும் கமலும் நல்லவர்கள் என்றாலும், இருவரும் கட்சி துவங்குவதற்கு என்ன அவசியம் வந்துவிட்டது? எனக் கேள்வி எழுப்பினார். "தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் தொழில் செய்யலாம், அரசியல் செய்யலாம். ஆனால் தலைமைப் பொறுப்பு என்பது நிச்சயம் ஒரு தமிழரிடம் மட்டுமே இருக்க வேண்டும். "நல்ல தலைவர்களை, அமைச்சர்களை உருவாக்குபவர்களாக இருக்கலாம். தலைமைப் பொறுப்புக்கு வர ஆசைப்படக்கூடாது," என்றார் பாரதிராஜா. ரஜனி, கமலுக்கு காவிரி, மீத்தேன் குறித்தெல்லாம் ஏதும் தெரியுமா? என்று கேள்வி எழுப்பிய அவர், தமிழகத்தின் நிலப் பரப்பு குறித்து கூட இருவருக்கும் சரியாகத் தெரியாது என்றார்.
தமிழரிடமே தலைமைப் பொறுப்பு: இயக்குநர் பாரதிராஜா வலியுறுத்து
1 mins read
-

