தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 45 நாட்களைக் கடந்து நீடித்து வரும் நிலையில், கல்லூரி மாண வர்களும் இத்தொடர் போராட்டத் தில் இணைந்துள்ளனர். தூத்துக்குடியில் இயங்கி வருகிறது ஸ்டெர்லைட் ஆலை. இந்த ஆலையில் இருந்து வெளி யேறும் நச்சுப்புகை மற்றும் கழிவு களால் சுற்றுச்சூழலும் தங்களது வாழ்வாதாரங்களும் வெகுவாகப் பாதிக்கப்படுவதாக பொதுமக் கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆலை விரிவாக் கத்தை எதிர்த்தும், ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த 24ஆம் தேதி தூத்துக் குடியில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கு ஆதரவாக கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. மேலும் பேருந் துகள், ஆட்டோக்கள், திரையரங் குகள் இயங்கவில்லை. இந்நிலையில் கல்லூரி மாண வர்களும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக களமிறங்கி உள்ளனர். நேற்று முன்தினம் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். கல்லூரியின் முன்பு கூடிய அவர்கள், ஆலைக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதே போல் நேற்று தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாண வர்கள் வகுப்புகளைப் புறக் கணித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

