விமான நிலைய நடைமேடையில் சிதறிக் கிடந்த தங்கக் கட்டிகள்

விமான நிலைய நடைமேடையில் சிதறிக் கிடந்த தங்கக் கட்டிகள்

1 mins read
8c9abfd3-8549-4fd3-a361-d414929e5d8c
-

மதுரை: விமான நிலைய நடை மேடையில் தங்கக் கட்டிகள் சிதறிக் கிடந்ததால் மதுரையில் பரபரப்பு நிலவியது. சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப் பட்ட அவற்றின் அனைத்துலக சந்தை மதிப்பு ரூ.31 லட்சம் எனக் கூறப்படுகிறது. துபாய், சிங்கப்பூர், இலங்கை யில் இருந்து மதுரைக்கு விமா னங்கள் இயக்கப்படுகின்றன. இதையடுத்து இந்த விமான நிலையம் மூலம் தங்கம் கடத்தப் படுவது அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அனைத் துலக விமான நிலையங்களில் மதுரை மூலமாகத்தான் தங்கக் கடத்தல் அதிகளவில் நடைபெறு கிறது. இதனால் இங்கு சுங்கத் துறை அதிகாரிகளின் கண் காணிப்பு தொடர்ந்து தீவிர மடைந்து வருகிறது. நேற்று முன்தினம் இலங்கையில் இருந்து மதுரைக்குத் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து விமானப் பயணி கள் அனைவரும் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட னர். எனினும் கடத்தல் தங்கம் ஏதும் சிக்கவில்லை.

மதுரை அனைத்துலக விமான நிலையம். படம்: தகவல் ஊடகம்