பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் 224 சட்டப்பேரவைத் தொகுதி களுக்கு விரைவில் தேர்தல் நடத் தப்பட உள்ளது. தேர்தல் வர உள்ளது என்றால் அதுகுறித்த ஆய்வுகளும் கருத்துக் கணிப்பு களும் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். சிஃபோர் என்ற அமைப்பு இந்த கர்நாடகத் தேர்தல் குறித்த கருத் துக்கணிப்பை அண்மையில் நடத்தி உள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வாக்குகளை அள்ளி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரியவந்துள்ளது.
கடந்த 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 154 தொகுதி களில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தியதில் காங்கிரஸ் கட்சி 9% கூடுதல் வாக்குகளைப் பெற்று மொத்தம் 46% வாக்குகளையும், பாஜக 31% விழுக்காடு வாக்கு களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 16% வாக்குகளையும் பெறும் என்று தெரியவந்துள்ளது.

