புகைக்கும் யானை: காட்டுத் தீ போல் பரவும் காணொளி

புகைக்கும் யானை: காட்டுத் தீ போல் பரவும் காணொளி

1 mins read
d005a885-99aa-4fd3-9434-576e8c93e82e
-

கர்நாடக வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று புகைப் பது போன்ற காணொளி வேகமாகப் பரவி வருகிறது. நாகர்கொளே தேசியப் பூங்காவில் படமாக்கப்பட்ட அந்தக் காட்சியில் யானையின் வாயிலிருந்து வெளிவரும் புகையைக் கண்டு வனத்துறையினரும் விலங்குகள் நல ஆர்வலர்களும் அதிர்ச்சி யும் ஆச்சரியமும் அடைந் துள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி வினய்குமார் கூறும்போது, எரிந்துபோன மரத்தின் கரித்தூளையும் அதன் சாம்பலையும் இந்த யானை சாப்பிடும்போது, அது புகைப்பது போல தோன்றியிருப்பதாகத் தெரிவித்தார். கடந்த 2016ஆம் ஆண்டு எடுக்கப் பட்ட இந்தக் காணொளிப் படம் தற்போது வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. படம்: இன்டிபெண்டன்ட் ஊடகம்