ராமதாஸ்: தமிழக மக்கள் முதுகில் மீண்டும் குத்துகிறது மத்திய அரசு

ராமதாஸ்: தமிழக மக்கள் முதுகில் மீண்டும் குத்துகிறது மத்திய அரசு

1 mins read
8564d058-41aa-4b36-bb28-57fca8224bca
-

சென்னை: காவிரிப் பிரச்சினையில் தமிழக மக்களின் முதுகில் மீண் டும் ஒருமுறை குத்த மத்திய அரசு தயாராகி விட்டதாகவே தோன்றுகி றது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் இச்செயல்பாடு மன்னிக்க முடியாத துரோகம் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப் பிட்டுள்ளார். ஒரு தேர்தல் வெற்றிக்காக ஒரு மாநிலத்தின் மக்களும் விவ சாயிகளும் இறந்தாலும் பரவா யில்லை என்று நினைக்கும் அள வுக்கு மத்திய ஆட்சியாளர்களின் மனம் கல்லாக மாறியிருப்பதாக விமர்சித்துள்ள அவர், அத்தகைய துரோகத்திற்கு தமிழகத்தை ஆளும் ஆட்சியாளர்களும் துணை போவதாகச் சாடி உள்ளார்.

"காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்த துரோகத்தைக் கண்டித்தும், உடனடியாக மேலாண்மை வாரி யத்தை அமைக்க வலியுறுத்தியும் முதற்கட்டமாக நாளை முதல் கோரிக்கை நிறைவேறும் வரை தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றும் போராட்டத்தை நடத்த வேண்டும் என ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார். இது அரசியலுக்காகவோ, அரசியல் கட்சியின் சார்பிலோ நடத்தப்படும் போராட்டம் அல்ல என தெளிவுபடுத்தியுள்ள அவர், இது உழவர்களுக்காக மக்களால் நடத்தப்படும் போராட்டம் எனக் குறிப்பிட்டுள்ளார்.