தஞ்சை: அம்மாபேட்டை அருகே கச்சா எண்ணெய்க் கிணற்றை முற்றுகையிட முயற்சி செய்த அர சியல் கட்சித் தலைவர்கள் உட்பட 800 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி களை வேகப்படுத்தி உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அம்மாபேட்டை அருகே உள்ள தீபாம்பாள்புரம், மருவத்தூர் உள்ளிட்ட கிராமங்க ளில் 7 இடங்களில் கச்சா எண் ணெய் எடுக்கும் பணிக்காக குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின் றன. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள் நேற்று முன்தினம் போராட்டத்தில் குதித்தனர். பல் வேறு அரசியல் கட்சிகள், அமைப்பு கள் இதற்கு ஆதரவு தெரிவித்தன.
முதற்கட்டமாக கச்சா எண் ணெய் எடுக்கும் பகுதியை முற்று கையிட்டுப் போராட்டம் நடத்தப் படும் என போராட்டக்குழு ஒருங் கிணைப்பாளர் திருநாவுக்கரசு அறிவித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வு ரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் அனைவரும் கச்சா எண்ணெய் எடுக்கும் பகு தியை முற்றுகையிட முயன்றனர். அப்போது ஊர்வலமாகச் சென்ற அவர்களை தீபாம்பாள்புரம் பகுதியில் போலிசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர்.
முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற திருமா, பாலகிருஷ்ணன். படம்: தமிழகத் தகவல் சாதனம்

