புதுடெல்லி: வங்கிகள் அனைத் தும் தாங்கள் கொடுத்த கடனை வசூலிக்க முடியாமல் வருடக் கணக்கில் திணறிக்கொண் டிருக்க, விஜய் மல்லையாவோ இப்போது மூன்றாவது திரும ணத்துக்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மல்லையா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றபோது அவருடன் சென்றவர்தான் அவரது காதலி பிங்கி லால்வாணி. 2016ஆம் ஆண்டு முதல் தன்னோடு வசித்துவரும் பிங்கியையே மல்லையா திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி அளவுக்குக் கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச்சென்றார் விஜய் மல்லையா. இவரின் பாஸ் போர்ட் முடக்கப்பட்டது. சிபிஐ வழக்கை விசாரித்தது. இப்போது வரை அவரை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வரமுடியாமல் இந்திய அரசு திணறுகிறது.
மல்லையா, பிங்கி லால்வாணி

