புதுடெல்லி: தென்னிந்தியாவைப் பொறுத்தவரை எதிர்வரும் தேர் தலில் தமிழ்நாட்டில் திமுகவும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியும் அமோக வெற்றி பெற்று மாபெரும் சக்திகளாக உருவெடுக் கும் என்று மேற்கு வங்க மாநில முதல்வரும் திரிணாமூல் காங் கிரஸ் தலைவியுமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகள் அனைத் தையும் ஓரணியாகத் திரட்டும் முயற்சியில் மும்முரம் காட்டி வருகிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களி டம் பேசிய மம்தா, "மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க முடியாது. அவர்கள் மூட்டையைக் கட்டிக்கொண்டு வெளியேறிவிட வேண்டிய நாள் நெருங்கிவிட்டது. "2019 நாடாளுமன்றத் தேர்தல் சுவாரஸ்யம் மிகுந்ததாக இருக்கப் போகிறது. இதன் தொடர்பிலேயே தலைவர்களைச் சந்தித்து வரு கிறேன்.
"நேற்று (மார்ச் 28) பாஜக மீது அதிருப்தியில் உள்ள மூத்த தலை வர்களான யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, அருண் ஷோரி, சமாஜ்வாடி தலைவர் அகி லேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரையும் சந்தித் துப் பேசவுள்ளேன்," என்று தெரி வித்தார்.
"தமிழகத்தில் வரும் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மாபெரும் சக்தியாக உருவெடுக் கும். அதேபோல் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவே மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவார். "மாயாவதியின் வெற்றியிலும் எந்த சந்தேகமும் இல்லை. எனவே அடுத்த முறை பாரதிய ஜனதாவால் நிச்சயம் ஆட்சிக்கு வரமுடியாது," என்றார் மம்தா.
பாஜகவை வீழ்த்துவதில் மும்முரம் காட்டி வரும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மற்றும் பல தலைவர்களுடன் ஆலோசனை செய்தார். படம்: ஊடகம்

