தஞ்சோங் பகார் ரயில் நிலையப் புதுப்பிப்புப் பணி தொடக்கம்

தஞ்சோங் பகார் ரயில் நிலையப் புதுப்பிப்புப் பணி தொடக்கம்

1 mins read
7b580927-760c-4693-a9e0-6274e491d6e7
-

தஞ்சோங் பகார் ரயில் நிலையம் வழியாக இனி ரயில்கள் இயங்கப் போவதில்லை என்றபோதும் மரபு டைமையைப் பாதுகாக்கும் பெரு முயற்சியின் காரணமாக முன்பு இருந்த இடத்திலேயே மீண்டும் அந்த நிலையம் கம்பீரமாக தலை நிமிர்ந்து நிற்கப்போகிறது. விரிவாக்கம் செய்யப்படும் வட்ட ரயில் பாதையில் புதிய கேன் டோன்மென்ட் எம்ஆர்டி நிலை யமும் அமையவிருக்கிறது. அந்த நிலையத்தின் கட்டுமானப் பணி களுக்காக 85 ஆண்டுகள் பழ மையான தஞ்சோங் பகார் நிலை யத்தின் நடைமேடை விதானங்கள் அகற்றப்பட்டுவிட்டன.

2025ல் கேன்டோன்மென்ட் நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்ததும் கூரை, உத்தரங்கள், தூண்கள் அடங்கிய விதானங்கள் சேமிப்பு முற்றத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பழையபடி அதே இடத்தில் பொருத்தப்படும். 2016 டிசம்பர் 26ஆம் தேதி தஞ்சோங் பகார் நிலையம் மூடப் பட்டது. அதைத் தொடர்ந்து, எம் ஆர்டி திட்டப் பணிகளுக்காக 580 மீட்டர் நீளம் கொண்ட நடை பாதையை அகற்றும் பணியை ஊழியர்கள் தொடங்கினர். இந்நிலையில், கட்டுமானப் பணிகளில் குறுக்கிடாது என்ப தால் ஒவ்வொரு நடைமேடையும் 80 மீ. நீளத்திற்கு அகற்றப்படாமல் அப்படியே விடப்பட்டது.

தஞ்சோங் பகார் ரயில் நிலைய நடைமேடை விதானம் பகுதி பகுதியாக வெட்டி எடுக்கப்பட்டு சேமிப்பு முற்றத்தில் வைக்கப்பட்டுள்ளன. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்