மயிலை கபாலீஸ்வரர் கோவில் தேர் திருவிழா

1 mins read
b35851d2-80f1-4b78-a72d-743a68b9e654
-

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் திருக்கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். தேர் சென்ற வழியெங்கும் பக்தர்கள் பூக்களைத் தூவினர். தற்போது இக்கோவிலில் பங்குனித் திருவிழா நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தைக் காண வெளிநாடுகளில் இருந்தும் சிலர் வந்திருந்தனர். தேரோட்டத்தை யொட்டி மயிலை பகுதியில் காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தது. படம்: ஏஎப்பி.