சென்னை: திமுக மூத்த தலைவர் ஒருவர் காங்கிரஸ் முக்கியப் பிரமுகரிடம் பேசிய சில விஷயங் கள் காரணமாக, இரு கட்சிக ளுக்கு இடையேயான கூட்டணி யில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் போது தமிழக காங்கிரசுக்கு குறைவான தொகுதிகளை ஒதுக்குவதே திமுக தலைமையின் திட்டம் என்றும், அதைச் செயல் படுத்தும் நோக்கத்துடனேயே மூத்த தலைவரை இவ்வாறு பேச வைத்திருப்பதாகவும் காங்கிரஸ் தலைமை கருதுவதாக அந்த ஊடகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
"எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு நான்கு தொகுதிகள் மட்டுமே ஒதுக் கப்படும். இதை ஏற்காவிட்டால் கூட்டணி நீடிக்காது," என்று அந்த திமுக மூத்த தலைவர், தாம் அண்மையில் சந்தித்த காங்கிரஸ் பிரமுகரிடம் திட்டவட்டமாகக் கூறியதாகத் தெரிகிறது.

