மதுரை: கவசக்கோட்டை பகுதியில் தொல்லியல் துறையினர் விரிவான ஆய்வுகளை மேற்கொண்டால் பண்டைக்கால குறுநில மன்னர் களின் வரலாறுகளைக் கண்டறிய முடியும் என மதுரை பாண்டிய நாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் முயற்சியால் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கவசக்கோட்டை பகுதியில் 1900 ஆண்டுகள் பழமை வாய்ந்த முதுமக்கள் தாழி, தமிழ் பிராமி எழுத்துகளுடன் கூடிய ஓடுகள், நடுகல் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து செய்தியாளர்களி டம் பேசிய வரலாற்றுத் துறை உதவி பேராசிரியரான முனீஸ் வரன், ஆசனக் கற்கள், சதிகல், மீன் வடிவம் பொறித்த பானை ஓடுகள் உள்ளிட்ட மேலும் பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளதாகத் தெரிவித்தார். இவை அனைத்தும் கிபி 1 மற்றும் 2ஆம் நூற்றாண்டு கால கட்டத்தைச் சேர்ந்தவை எனக் கருதப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், இவற்றில் உள்ள தமிழ் பிராமி எழுத்துகள் தொடர்ச்சி யின்றி உள்ளதால் விவரங்களை அறிய முடியவில்லை என்றார்.
''பண்டைய காலத்தில் குறு நிலப் பகுதிகளான கவுசீலன் என்ற பகுதியை கவுசீல மன்னனும் தென்னந்தோப்புப் பகுதியை முர சொலி மன்னனும் ஆண்டு வந்த தாகக் கருதப்படுகிறது. "இவர்களுக்கு இடையே போர் மூண்டபோது, முரசொலி மன்னன் தோற்கடிக்கப்பட்டு போரில் கொல் லப்படுகிறார். அதனால் அவரது மனைவி கண்டமரத்தி உடன் கட்டை ஏறி உயிர் விடுகிறார்.
கிபி 1 மற்றும் 2ஆம் நூற்றாண்டு கால கட்டத்தைச் சேர்ந்த தாழிகள். படம்: தமிழக ஊடகம்

