இண்டிகோ விமானத்தின் டயர் வெடிப்பு: குழந்தை உட்பட 77 பேர் உயிர் தப்பினர்

இண்டிகோ விமானத்தின் டயர் வெடிப்பு: குழந்தை உட்பட 77 பேர் உயிர் தப்பினர்

1 mins read

திருப்பதி: ஹைதராபாத் விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்கியபோது டயர் வெடித்தது. ஆனால் 73 பயணிகளும் எந்த ஆபத்தும் இல்லாமல் உயிர் தப்பினர். திருப்பதியில் இருந்து ஒரு குழந்தை உள்ளிட்ட 73 பயணிகள், 4 பணியாளர்கள் என 77 பேர் பயணம் செய்த இண்டிகோவின் ஏடிஆர்=72 ரக விமானம் நேற்று முன்தினம் இரவு 11.25 மணியளவில் ஹைதராபாத்தில் தரையிறங்கியது.

எதிர்பாராதவிதமாக விமானத்தின் டயர் ஒன்று வெடித்ததால் தரையில் உரசி தீப்பொறி பறந்தது. இதனால் விமானத்திற்குள் இருந்த எம்எல்ஏ ரோஜா உள்ளிட்ட பயணிகள் பெரும் பீதிக்கு ஆளாகினர். இதனிடையே, டயர்வெடித்த விமானம் ஓடுதளத்தில் நின்றதால் அந்த ஓடுதளம் மூடப்பட்டது. அங்கு பின்னர் தரையிறங்க வேண்டிய விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்குத் திருப்பிவிடப்பட்டன.