போலி வங்கி நடத்தியவர் கைது

போலி வங்கி நடத்தியவர் கைது

2 mins read
b239d40f-f3b9-4bff-9930-dc38ee63d2b2
-

வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் கர்நாடகா வங்கியின் போலி கிளையை நடத்தி வந்தவர் கைதா னார். அம்மாநிலத்தின் பல்லியா மாவட்டத்தில் முலாயம் நகர் பகுதியில் அஃபாக் அகமது என் பவர் கடந்த ஒரு மாத காலமாக இந்தப் போலி வங்கி இயங்கி வந்திருப்பதாக போலிசார் கூறு கின்றனர். வாரணாசியில் செயல்படும் 'பேங்க் ஆஃப் கர்நாடகா' வங்கி யின் பொது மேலாளர் உபத்யாயா போலிசாருக்கு தகவல் அளித் தார். அதன் அடிப்படையில், போலி சாரும் வாரணாசி கிளை வங்கி அதிகாரிகளும் முன்னாள் ராணுவ அதிகாரியின் இடத்தில் செயல் பட்டு வந்த போலி வங்கியில் அதி ரடி சோதனை மேற்கொள்ளப்பட் டது.

அப்போது வினோத் குமார் காம்பளி என்ற போலி பெயரில் மேலாளராக இருந்த அஃபாக் அகமது வங்கி நடத்துவதற்கான எந்த ஆதாரங்களையும் தராததால், போலிசார் அவரைக் கைது செய் தனர். மேலும் அங்கு நடந்த சோதனை யின்போது 15 புதிய சேமிப்பு வங்கிக் கணக்குள், ஒரு சில நிரந்தர வைப்புத்தொகை கணக் குள் வாயிலாக அஃபாக் அகமது வசூல் செய்த 1.37 லட்ச ரூபா யையும் போலிசார் கைப்பற்றினர். இதுதவிர போலி ஆதார் அட்டை உட்பட வங்கித் தொடர் பான பல்வேறு போலி ஆவணங் களும் கைப்பற்றப்பட்டன. போலி வங்கி நடத்திய அகமதுவைக் கைது செய்த போலி சார் அவர் மீது பல்வேறு பிரிவு களில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறினர்.

புதிதாக தொடங்கப்பட்ட சேமிப்புக் கணக்குகள், நிரந்தர வைப்புத் தொகை ஆகியவற்றின் வாயிலாக அஃபாக் அகமது மோசடி செய்த 1.37 லட்ச ரூபாயை போலிசார் கைப்பற்றினர். படம்: ஊடகம்