ஹைதராபாத்: தெலுங்கு தேசம் கட்சியின் 37வது ஆண்டு விழாவில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு பேசியபோது, "பாஜக கூட்டணி யால் குறைந்தது 15 தொகுதி களை இழந்துவிட்டோம். பாஜக வுடனான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நாங்கள் சேராமல் இருந்திருந்தால் தெலுங்கு தேசம் கட்சி கூடுதலாக 15 இடங்களைக் கைப்பற்றி இருக் கும். இருப்பினும் அப்போதைய சூழலில் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு நாங்கள் அந்தக் கூட்டணிக்குச் சம்மதம் தெரிவித்தோம். ஆனால், ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத் தில் பாஜக அரசு எங்களுக்குத் துரோகம் இழைத்துவிட்டது. "சிறப்பு அந்தஸ்து என்பது எங்கள் உரிமை. ஆனால், பொய்களைப் பரப்பி மத்திய அரசு அதை எங்களுக்கு மறுத்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.
சந்திரபாபு நாயுடு: பாஜகவால் 15 தொகுதிகளை இழந்துவிட்டோம்
1 mins read

