புதுடெல்லி: கேள்வித்தாள் வெளி யான விவகாரம் தொடர்பில் நாடு முழுவதும் மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள் ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து நேற்று இரண்டாவது நாளாக டெல்லியில் உள்ள சிபி எஸ்இ அலுவலகம் முன்பு திரண்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி னர். இந்தப் போராட்டத்தில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சேர்ந்துகொண்டனர். கேள்வித்தாட்கள் கசிந்த சம்பவம் தொடர்பில் சுமார் 25 பேரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முக்கிய குற்ற வாளியாகக் கருதப்படும் 'டியூசன்' ஆசிரியரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்தச் சம்பவத்தில் சிபிஎஸ்இ அதிகாரிகள் யாருக்கேனும் தொடர்புள்ளதா என்றும் விசாரிக் கப்பட்டு வருகிறது.
அத்துடன் இன்னும் சில பாடங்களிலும் கேள் வித்தாட்கள் வெளியாகி இருக்க லாம் எனவும் தகவல்கள் குறிப் பிட்டுள்ளன. இந்நிலையில், "சிபிஎஸ்இ அலு வலகம் செய்த தவற்றுக்கு நாங்கள் ஏன் பொறுப்பேற்று சிரமப்பட வேண்டும். அவர்கள் தேர்வுக் கான வினாத்தாள்களைப் பத்திர மாக வைக்கத் தவறிவிட்டனர். மாணவர்கள் மீண்டும் ஒருமுறை தேர்வு எழுதவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும்," என்று மாணவர்கள் முழங்கியதாக ஏஎன்ஐ ஊடகம் தெரிவித்துள்ளது.
இரண்டாவது நாளாக டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ஆசிரியர்களும் பங்கேற்றனர். தேர்வுக்கான வினாத்தாள் கசிந்தது தொடர்பில் முன்னதாக தேர்வு எழுதிய மாணவர்களை மீண்டும் ஒருமுறை தேர்வு எழுதவேண்டும் என்று கல்வி வாரியம் உத்தரவிட்டது. "உங்கள் தவற்றுக்கு நாங்கள் பொறுப்பல்ல, மறுதேர்வு உத்தரவை ரத்து செய்க," என்று கோரி மாணவர்கள் முழங்கினர். படம்: ஊடகம்

