ரஜினிக்கு பழனிசாமி பதில்: வெளி மாநிலங்களில் அரசியல் செய்யுங்கள்

ரஜினிக்கு பழனிசாமி பதில்: வெளி மாநிலங்களில் அரசியல் செய்யுங்கள்

1 mins read
e9d4fb58-90a4-40ba-9afe-c82b043f965c
-

மதுரை: காவிரி நீர் பிரச்சினைக்கு மேலாண்மை வாரியத்தை அமைப் பதே இறுதித் தீர்வாகும் என்று அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள ரஜி னிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி மறைமுகமாகப் பதில் அளித்துள் ளார். "புதிதாக அரசியல் செய்ய வருபவர்கள் வெளி மாநிலங் களுக்குச் சென்று அரசியல் செய்யுங்கள்," என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மதுரையில் நேற்று 120 ஏழை ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த் திய முதல்வர் பழனிசாமி, ரஜினி அரசியலுக்கு வருவதை சூசக மாகக் குறிப்பிட்டுப் பேசினார். "தமிழக அரசியலில் ஏதோ காலியிடம் இருப்பதாகக் கூறி காலியிடத்தை நிரப்ப சிலர் புறப் பட்டுவிட்டார்கள். "தமிழக அரசியலில் அப்படி யொரு காலியிடமே இல்லை. தமிழக அரசியலில் இருக்கும் காலியிடங்களை நிரப்பப்போவ தாகக் கூறி புதிது புதிதாக கிளம்பியவர்கள், வெளி மாநிலம் சென்று அரசியல் செய்யுங்கள்," என்று திரு பழனிசாமி தெரிவித் தார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதே நிரந்தரத் தீர்வாக அமையும் என்று கூறியிருந்தார். இதற்கு ரஜினியின் கர்நாடக மாநில ரஜினி சேவா சமிதியினர் கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ள னர்.

மதுரை திருமண விழாவில் பேசிய தமிழக முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினியை மறைமுகமாக விமர்சித்தார். படம்: தமிழக ஊடகம்