ம. நடராஜன் படத் திறப்பு நிகழ்ச்சி; ஐம்பது பேர் மொட்டை

ம. நடராஜன் படத் திறப்பு நிகழ்ச்சி; ஐம்பது பேர் மொட்டை

1 mins read
a1a410e4-1a4a-4e3c-bb4f-da6543875d7a
-

சசிகலாவின் கணவரும் புதிய பார்வை இதழின் ஆசிரியருமான ம. நடராஜனின் படத் திறப்பு விழா நேற்று காலை தஞ்சையில் நடை பெற்றது. இதில் பழ. நெடுமாறன், கீ. வீரமணி, இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்து, டிடிவி தின கரன், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் சமாதியின் முன்பு ஐம்பது பேர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் உரையாற்றிய திவா கரன், "எனது சகோதரி சசிகலா துன்பத்திற்கு மேல் துன்பம் அடைந்து வருகிறார்.

35 வருடமாக அவருக்கு நிம்மதியே இல்லை. இப்போதும் அதுதான் தொடர்ந்து வருகிறது," என்று குறிப்பிட்டார். "நடராஜன் இறந்த பிறகு முள்ளிவாய்க்கால் முற்றத்தின் உள்ளே அவரது உடலை அடக்கம் செய்யலாம் என்று முடிவு எடுத் தோம். ஆனால் அது ஒரு டிரஸ்ட். அதற்குப் பழ. நெடுமாறன் தலை வராக இருக்கிறார். அதனால் அவரிடம் சென்று அனுமதியெல் லாம் கேட்க வேண்டும். எனவே நாங்கள் முள்ளிவாய்க்கால் முற்றம் எதிரே அவரது உடலை அடக்கம் செய்தோம்," என்றார் அவர்.

சசிகலாவின் கணவர் ம. நடராஜனின் படத் திறப்பு விழாவில் பல பிரமுகர்கள் பங்கேற்றனர். படம்: தமிழக ஊடகம்