அதிமுக எம்பிக்கு தபாலில் எலி மருந்து அனுப்பிய சமூக ஆர்வல

அதிமுக எம்பிக்கு தபாலில் எலி மருந்து அனுப்பிய சமூக ஆர்வல

1 mins read

கோவை: அதிமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கு சமூக ஆர்வ லர் எலி மருந்தை தபாலில் அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாக அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த மணி என்பவர், பொள்ளாச்சி அதிமுக எம்பியான மகேந்திரனுக்கு தபாலில் எலி மருந்துடன் கடிதமும் அனுப்பி உள்ளார். அதில், அதிமுக சார்பில், 37 எம்பிக்கள் இருந்தும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியவில்லை என சுட்டிக்காட்டி உள்ளார்.

"உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக எம்பி அறிவித்தது வரவேற்கத்தக்கது. 37 தமிழக எம்பிக்களும் உயிரை மாய்த்தாவது மக்கள் பிரச்சினைக்கு தீர்வு காணட்டும். அதற்காகவே எலி மருந்து அனுப்பப்படுகிறது. விவசாயம் வெல்லட்டும்," என மணி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.