பஞ்சாப்பில் பங்குனி உத்திரத் திருவிழா

1 mins read
e417ef20-21c9-4bb4-8eef-fca2c87498e4
-

முருகப் பெருமானை வணங்கும் விதமாக கொண்டாடப்படுகிறது பங்குனி உத்திர விழா. வழக்கம்போல் இந்த ஆண்டும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இவ்விழா சிறப்புற நடைபெற்றது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் வசிக்கும் தமிழர்களும் நேற்று முன்தினம் பங்குனி உத்திர விழாவை விமரிசையாக நடத்தினர். இதையொட்டி அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். விழாவில் பங்கேற்று காணிக்கைகள் செலுத்துவதால் தீய சக்திகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும் என பக்தர்கள் நம்புகின்றனர். படம்: ஏஎஃப்பி