தஞ்சை: திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, சசிகலா நடராஜனை நேரில் சந்தித்துப் பேசியது தமிழக அரசியல் களத் தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் மூலம் சசிகலா தரப்பை திமுக தலைமை மறை முகமாக ஆதரிக்கிறதா எனும் கேள்வியும் விவாதமும் எழுந் துள்ளது. சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் அண்மையில் கால மானார். இதையடுத்து அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாள் சிறை விடுப்பில் வெளியே வந்தார் சசிகலா. தஞ்சையில் தன் கணவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் னர் அவர் அங்கேயே தங்கினார். இச்சமயம் நண்பர்கள், உறவினர் கள், அரசியல் பிரமுகர்கள் என ஏராளமானோர் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
சிறை விடுப்பு முடிவதற்குள் சசிகலாவால் பல்வேறு அரசியல் மாற்றங்கள் ஏற்படும் எனக் கூறப் பட்டது. குறிப்பாக அதிமுகவின் முக்கிய பிரமுகர்கள் சிலரை அவர் தங்கள் அணி பக்கம் இழுப்பார் என்றும் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அத்தகைய எந்த மாற்றமும் வெளிப்படையாக நிகழ வில்லை. இந்நிலையில் சசி கலாவை திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நேற்று திடீரென நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது நடராஜனின் மறைவுக்கு அவர் ஆறுதல் கூறிய தாகத் தெரிகிறது. வெளிப்படையாக கூறப்பட்ட தகவல் இதுதான் என்றாலும், இந்தச் சந்திப்பு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் உள்ளது. நடராஜ னின் மறைவுக்கு ஏற்கெனவே திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித் துள்ளார். இந்நிலையில் நடராஜன் இறந்து, சசிகலாவின் சிறை விடுப்பும் முடிவுக்கு வரும் நிலையில், திடீரென கே.என்.நேரு நேரில் சென்று சசிகலாவைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

