சிறைச்சாலைகளில் நெரிசல்; 600% கைதிகள் அதிகம்

சிறைச்சாலைகளில் நெரிசல்; 600% கைதிகள் அதிகம்

1 mins read

புதுடெல்லி: இந்தியா முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் அனு மதிக்கப்பட்ட அளவைவிட 600 விழுக்காட்டிற்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டு நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது என்று உச்ச நீதிமன்றம் தெரி வித்துள்ளது. இந்தியச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை குறித்து உச்சநீதிமன்ற வழக்கு ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களின் மூலம் இது தெரிய வந்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 1,300 சிறைச்சாலைகளில் அனு மதிக்கப்பட்ட அளவைவிட 150 முதல் 609 விழுக்காடு வரை கூடுதலாக கைதிகள் அடைக்கப் பட்டுள்ளனர் என்ற விவரம் தெரி விக்கப்பட்டது.

இந்த விவரத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள் எம்.பி.லோக்கூர், தீபக் குப்தா அடங்கிய அமர்வு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிர தேசங்கள் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தியது. "சிறைக் கைதிகளுக்கும் மனித உரிமை உண்டு. அவர்களை விலங்குகளைப் போல் அடைத்து வைப்பதை அனுமதிக்க முடியாது. இப்படி அடைத்து வைத்தால் சிறை சீர்திருத்தத்தை எப்படி அமல்படுத்த முடியும். அதுபற்றி பேசுவதில் என்ன பலன் இருக்கிறது," என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணைக் கைதிகளை ஆய்வு செய்து விடுதலை செய்வ தற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் ஒழுங்காகச் செயல் படவில்லை என்பதையே தற் போதைய நிலவரம் காட்டுகிறது.