போபால்: மத்தியப்பிரதேச மாநிலத் தின் இந்தூர் பகுதியில் நான்கு மாடி கட்டடம் ஒன்று திடீரென்று சீட்டுக் கட்டு அட்டைகள் போல் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண் ணிக்கை 10 பேராக அதிகரித்து உள்ளது. புதுடெல்லியில் இருந்து 900 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தூர் நகர் அமைந்துள்ளது. மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் உள்ள சார்வேட் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த நான்கு மாடிக் கட்ட டத்தில் உணவுக் கூடமும் தங்கும் விடுதியும் செயல்பட்டு வந்தன. இந்தக் கட்டடம் சனிக்கிழமை இரவு 10 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.
இதைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினரும் மீட்புக் குழுவினரும் ஜேசிபி இயந்திரங் களைக் கொண்டு இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். "விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர். மூவர் காயம் அடைந் துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வரு கிறது. இடிபாடுகளில் இருந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்," என்று மத்தியப்பிரதேச போலிஸ் அதிகாரி சஞ்சு காம்லி கூறினார்.

