தம்பிதுரை: நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்

தம்பிதுரை: நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர அதிமுக தயார்

1 mins read

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசை எதிர்த்து நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வர அதிமுக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் மூத்த தலை வர்களில் ஒருவரான தம்பிதுரை தெரிவித்துள்ளார். "காவிரி விவகாரத்தில் அதிமுக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்," என்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தம்பிதுரை கூறினார்.

அதே நேரத்தில், அந்த முயற் சியைக் கையிலெடுக்க காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை என்றும் அவர் குறிப்பிட்டார். "திமுகவுடன் கூட்டணி வைத் திருக்கும் காங்கிரஸ், இந்த விவ காரத்தில் எங்களுக்கு ஆதரவு தருவதாகச் சொல்லட்டும். அப்படி அவர்கள் எங்களை ஆதரித்தால் மட்டுமே, நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தைக் கொண்டுவர போதிய எம்.பி.க்களின் ஆதரவு கிட்டும்," என்றார் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை.

இருப்பினும், அந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் காவிரிப் பிரச்சினைக்காக மட்டுமானதா கவே இருக்கும் என்றும் மற்ற பொதுப் பிரச்சினைகளுக்காக அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க எப்படி மக்கள் ஒன்றுதிரண்டு போராடினார்களோ, அதுபோல கட்சி பேதங்களை, அரசியல் எல் லைகளைக் கடந்து மக்கள் அணி திரண்டால் மட்டுமே காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தி லும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.