வடஇந்தியாவில் வன்முறை வெடித்தது; அறுவர் பலி

வடஇந்தியாவில் வன்முறை வெடித்தது; அறுவர் பலி

1 mins read
5d75e812-e422-40c8-a2c4-53b41c397382
-

இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எஸ்சி, எஸ்டி பிரிவினர் (வன்கொடுமைத் தடுப்பு) சட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதாக இருக் கிறது எனக் கூறி தலித் சமூ கத்தினர் நேற்று நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட போராட் டங்களில் பெரும் வன்முறை வெடித்தது. இதில் அறுவர் மாண் டனர். எஸ்சி, எஸ்டி பிரிவினரால் அளிக்கப்படும் புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய் யவும் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ளவும் தடை விதித்து சென்ற மாதம் 20ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பு, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான சட்டப் பாது காப்பை நீர்த்துப்போகச் செய்யும் என்று தலித் அமைப்புகள் கூறி வருகின்றன.

தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநி லங்களில் நேற்று போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதனால் அந்த மாநிலங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க போலிஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டில் உள்ள தங்களது கல்லூரி மீது கற்களை வீசிய போராட்டக்காரர்களில் ஒருவரை அடித்து உதைக்கும் மாணவர்கள். படம்: ஏஎஃப்பி