'மொழிபெயர்ப்புக்கு சிறப்பு முயற்சி அவசியம்'

'மொழிபெயர்ப்புக்கு சிறப்பு முயற்சி அவசியம்'

1 mins read

தேசிய தின அணிவகுப்புக்காக செய்யப்படும் மொழிபெயர்ப்பு துல்லியமாக இருக்க சிறப்பு முயற்சி எடுக்கப்பட வேண்டும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் (தொழில்) எஸ்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். மொழிபெயர்ப்பு துல்லியமாக இருப்பது மிகவும் முக்கியம் என்பதை அவர் வலியுறுத்தினார். கடந்த ஆண்டு தமிழ்மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட பிழைகளை அவர் சுட்டினார். அதைக் கருத்தில் கொண்டு இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்புக்காக மொழிபெயர்ப்பு செய்யும் முகவை கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார் அவர். மொழிபெயர்க்கப்பட்ட வாசகங் களை இந்த முகவைகள் ஒன் றுக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும் என்றார் திரு ஈஸ்வரன். பிழையற்ற வேலையை எதிர் பார்ப்பது நடைமுறைக்குச் சாத்திய மாகாது என்றும் எனவே மொழி பெயர்ப்புப் பணியுடன் தொடர்பு டையோர் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும் என்றார் தமிழ்மொழி விழா தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.